價格:免費
更新日期:2017-08-21
檔案大小:4.1M
目前版本:3.0
版本需求:Android 2.3 以上版本
官方網站:mailto:saranyavenkateswaran2009@gmail.com
Email:http://www.e-droid.net/privacy.php?ida=288802&idl=en
கீதை யாருக்குச் சொல்லப் பட்டது ? வாழ்ந்து முடித்த வயதானவர்களுக்கு, போகும் வழிக்கு புண்ணியம் தேட சொல்லப் பட்டது அல்ல. குரு குலத்தில் கல்வி பயிலும் இளம் மாணவர்களுக்கு சொல்லப் பட்டது அல்ல.
வாழ்வின் நடுவில் நிற்கும், வாழ வேண்டிய, வாழ்க்கையோடு போராட வேண்டிய ஒரு பொறுப்புள்ள மனிதனுக்குச் சொல்லப் பட்டது.
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திரு வாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று ஒரு வாசகம் உண்டு.
மற்ற புராண இதிகாசங்களைப் போல் இல்லாமல் இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.
உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். மூலத்தில் உள்ளதை கருத்துச் சேதாரமின்றி மொழிபெயர்ப்பதில் பாரதிக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது.
பகவத்கீதையைப் படிக்க விரும்பும் எவரும் ஆரம்ப நிலையி்ல், உரை எதுவும் இல்லாத, எளிய, மூலத்துக்கு நெருங்கிய பொருள் தரக்கூடிய சுலோக மொழிபெயர்ப்பில் தொடங்குவது அதிகப் பயனுள்ளதாகும்.
உரையாசிரியர்களின் விளக்கம் இல்லாமல், மூலத்தை அல்லது அதற்கு நெருக்கமான பொருள்தரும் உரையாக்கத்தை மட்டுமே தொடர்ச்சியாகப் படித்து, அதன் பிறகு உரையாசிரியர்களின் விளக்கங்களுக்குச் செல்வது திருக்குறள் உள்ளிட்ட எந்த நூலையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்பது அனுபவ மொழி.
இதைக் கருத்தில் கொண்டு, இதுவரை இணையத்தில் முன்னுரையாக மட்டுமே கிடைத்துவந்த பாரதியின் பகவத்கீதை மொழிபெயர்ப்பின் முழுவடிவத்தை இந்தியச் சுதந்திர தினப் பரிசாக SKV Apps India வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறது. இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு, அது தனி நூலாகவே பதிப்பிக்கப்பட்டும், படிக்கப்பட்டும் வருகின்றது. மொழிபெயர்ப்பின் சிறப்பைக் குறித்து சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
பாரதி செய்துள்ள இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போகிறது என்பது இயல்பாகவே விளங்கும். மற்ற உபநிடதங்களில் நிகழும் குரு-சீட உரையாடல்களில், சீடனுடைய கேள்விகளில் தொனிக்கும் பாவத்துக்கும், உறவினனும், நெருங்கிய தோழனுமாக விளங்கிய ஒருவனிடம் உபதேசம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒருவன் கேள்விகளை எழுப்பும் தோரணையில் தென்படும் பாவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்றே போதும், இத்தகைய வாதம் செல்லாத செப்புக்காசு கூட பெறா ஒன்று என்பதை எடுத்துக் காட்டுவதற்கு.
நாங்கள் எடுத்துள்ள இத்தனை முயற்சிகளையும் மீறி, எங்காகிலும் பிழைகள் தென்படுமாயின் அருள்கூர்ந்து அவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கோருகிறோம்.
- SKV Apps India